மத்திய அரசு புதியதாக அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

அக்னிபாத் திட்டம் என்பது நன்கு ஆண்டு வேலை காலம் உள்ள திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் வேலையின்மையை குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு என்பது பெரிய கேள்வி கூறியாகியுள்ளது.

agneepath 1

இராணுவத்தில் ஆட்களை சேர்க்கும் நான்கு ஆண்டு திட்டமானது மத்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் வட மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் 17.5 வயது முதல் 21 வயது வரை இராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என்ற அறிவிப்பை வன்மையாக கண்டித்துள்ளனர். வட மாநிலத்தினர், இந்த அறிவிப்பை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Agneepath 2

ஆனால், இந்த கோரிக்கையினை மத்திய அரசு பரிசீலினை செய்யாததால் வட மாநிலங்களில் போராட்டம் வெடித்ததுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் 3வது நாளாக போராட்டம் தொடர்கின்றது. ஏற்கனவே சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் போராட்டக்காரர்கள். இந்நிலையில் இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். பீகாரில் மட்டும் பல ரயில் நிலையங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

Agneepath 3

பீகார் மாநிலத்தில் உள்ள பக்சர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் மொஹியுதி நகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர் . இதில் ரயில் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

அக்னி பாத் என்பது என்ன? அக்னி பாத் எனும் இராணுவத் திட்டமும் பாஜகவின் பாசிச நோக்கமும்…

ஜம்மு தாவி எக்ஸ்பிரஸூக்கும் தீவைக்கப்பட்டது. பீகார் முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் சேவை மாநிலத்தில் முடக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ரயில் சேவை மற்றும் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நடைபெறும் கடும் போராட்டத்தால் ரயில்வே நிலையம் முன்கூட்டியே ரயில் சேவையை நிறுத்தியுள்ளது. இருப்பினும், ரயில் நிலையங்களுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து, ரயில்களுக்கு தீவைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்தியப்பிரதேசத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.

Agneepath 4

தென் மாநிலங்களில் முதலாவதாக தெலங்கானாவில் போராட்டம் தலை தூக்கியுள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ரயில்களுக்கு தீ வைத்தனர். மேலும் ரயில் நிலையங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அம்மாநிலத்திலும் பதற்ற நிலை தொடங்கியுள்ளது. இதனிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.