விமான விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் இந்திய விமானப் படை தலைமை தளபதி விஆர் சவுத்ரியிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

Anniyans A MIG 21 fighter aircraft of the Indian Air Force Crashed near Barmer District

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இந்திய விமானப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது நேற்று இரவு 9.10 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக பர்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பந்து கூறுகையில், இந்த விமான விபத்து பர்மர் மாவட்டத்தின் பிம்தா என்ற கிராமத்தின் அருகே ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விமானம் வெடித்து விழுந்த பின்னர், சம்பவ இடத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்திற்கு உரிய தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

Anniyans Rajasthan A MIG 21 Fighter aircraft crashedIAF near Barmer District

இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் இந்திய விமானப் படை தலைமை தளபதி விஆர் சவுத்ரியிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த இராஜ்நாத் சிங். நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய சேவை என்ற மறவாமல் நிலைத்திருக்கும் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் அன்மை காலமாகவே இந்த மிக் ரக விமானங்களில் விபத்துக்கள் ஏற்படுவது அதிகம் காணப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் விமான விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சோவியத் ரஷ்யா காலத்து விமானமான இந்த மிக் ரக விமான பயன்பாட்டை விரைவில் நிறுத்தி நவீன ரக விமான பயன்பாட்டிற்கு மாற இந்திய விமானப் படை மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.