மத்திய அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் ரயில்களும், ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீக்கிரையாகி வருகின்றன.

1655520235968

இராணுவத்தில் பெருமளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் மத்திய அரசு ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை கடந்த ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. மோடி தலைமையிலான மத்திய அரசு, இராணுவத்துறையில் ‘அக்னி பாத்’ எனும் புதிய திட்டத்தை கொண்டு வருகிறது. ஆங்கிலத்தில் ‘Tour of Duty’ என்று கூறப்படும் இத்திட்டத்தின் படி, 17.5 வயது முதல் 21 வயதுவரை உள்ள இளைஞர்களில் ஆண்டுக்கு 45000 பேர்களை ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களாக இராணுவ முப்படைகளில் சேர்க்கப்படுவார்கள். இவர்களின் பணிக்காலம் 4 ஆண்டுகள் மட்டும்தான். 4 ஆண்டுகளில் இவர்களில் தகுதியுடையவர் என்று 25 சதவீதத்தினர் மட்டும் 15 ஆண்டுகாலத்திற்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். 75 சதவீதத்தினர் வீட்டுக்கு அனுப்பப்படுபவர்கள். பணிக்காலத்தில் இவர்களுக்கு, மாதம் ரூ. 30000 முதல் ரூ. 40000 வரை தொகுப்பூதியமாகக் கொடுக்கப்படும்.

1655454913424

நான்காண்டுகளில் திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு ஓய்வூதியம் எதுவுமில்லை. அவர்களின் மாத ஊதியத்தில் சுமார் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பிடித்தம் செய்து, அதே அளவுக்கு அரசும் தொகை செலுத்தி, நான்காண்டு முடிவில் ரூ.12 இலட்சம் வரை தொகை அளிக்கப்படும். பணி காலத்தில் ரூ. 45 இலட்சம் அளவில் காப்பீடும், பணிகாலத்தில் உயிரிழந்தால் ரூ.44 இலட்சம் இழப்பீடும் அளிக்கப்படும். நான்காண்டுகளுக்கு பிறகு பணியிலிருந்து திரும்புகிறவர்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான எந்த உரிமையும் அளிக்கப்படாது. வழக்கம் போல, இத்திட்டம் வேலைவாய்ப்புத் திட்டமாகவும், நாட்டுப்பற்றை இளைஞர்களுக்கு ஊட்டும் திட்டமாகவும் பாஜகவினராலும், பாஜக ஆட்சியை ஆதரிப்பவர்களாலும் வரவேற்கப்படுகிறது.

இந்நிலையில், ஓய்வூதியப் பலன்களும், பணி நிரந்தரமும் எந்தவித இல்லாமல் இராணுவத்தில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபாத்’ திட்டத்தினை ரத்து செய்ய கோரி வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென் இந்தியாவைப் பொறுத்தவரையில், தெலங்கானாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே, அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான இப்போராட்டங்களானது நேற்று முதல் வன்முறையாக மாறி வருகின்றது.

1655520128405

உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்தனர். பீகாரில் கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அம்மாநில துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஈடுபட்டது. அதனையடுத்து போலீஸார் வந்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். துணை முதலமைச்சர் ரேணு தேவி வீட்டில் இல்லாததால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வன்முறையின் ஒரு பகுதியாக, சித்வாலா ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. இதனையடுத்து பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பீகாரில் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அங்குள்ள 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

156689

உத்தரபிரதேச மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள பாலியா ரயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு போராட்டக்கார்கள் நேற்று (ஜூன் 17) தீ வைத்தனர். இதேபோல், பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கத்து போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். இதனால் உத்தரபிரதேசத்தில் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள் என வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

இதேபோல, மத்திய பிரதேசம், தெலங்கானா, ஹரியாணா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகின்றன. தெலங்கானாவில் வாராங்கலில் ரயில் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்ததார். 15 பேர் காயமடைந்து உள்ளனர். பல இடங்களில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

232625 agnipathbihar

இவ்வாறு நாடு முழுவதும் நடைபெறும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டங்களில் 12 ரயில்கள் தீக்கிரையாகி உள்ளன. 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டு உள்ளன. 500-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டு உள்ளன. 90-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதி வழியிலேயே நின்றுக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க…அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 3வது நாளாக போராட்டம் – ரயில்களுக்கு தீ வைப்பு!