தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே புறப்படுவார் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திமுக கட்சியினை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் நடைபெற்றது. தாங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

இதனையடுத்து சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜகவினர் திட்டமிட்டு இருந்தனர். வடசென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் மேற்கொள்ள தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுருந்தார். ஆனால் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Anniyans annamalai fasting protest in Chennaivalluvar kottam

அதனையடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, தமிழ் நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் மற்றும் கோவையில் வானதி ஸ்ரீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசினார், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அவர் பேசியதாவது “உதயநிதிக்கு அமைச்சர் பதவி காத்திருப்பதை போல இங்கே ஒரு ஷிண்டே புறப்படுவார்”. 2024-ல் தமிழகத்தில் நிச்சயம் 25 எம்.பி.க்களை பாஜக உருவாக்கும். 25 எம்.பிக்களை நாம் உருவாக்கினால் தான் 180 சட்டமன்ற உறுப்பினர் பெற்று 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முடியும்.

டிசம்பர் 31ம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை திமுகவினால் நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஜனவரி1ம் தேதி பாதயாத்திரை துவங்கி டிசம்பர்31ம் தேதி கோபாலபுரம் பகுதியில் பாதயாத்திரை முடிவடையும். “ஒரு வருடம் குடும்பம் சம்பாத்தியம் அனைத்தையும் விட்டுவிட்டு பாதயாத்திரையில் பா.ஜ.க தொண்டர்கள் தயராக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து மாதம் அதற்காக தயாராகுங்கள்” என்று தெரிவித்தார்.