நாகப்பட்டினம் விருந்தினர் மாளிகையில், நேற்று செய்தியாளர்களிடம், ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியதாவது:
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மற்றும் தெலங்கானா கவர்னர் ஆகி விட்டார். அதே போல் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராகி விட்டார். அந்த வகையில் அந்தமான் கவர்னர் பதவியை குறி வைத்து அண்ணாமலை தற்போது காய் நகர்த்தி வருகிறார்.
தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகனுக்கு கிடைத்தது போல் தனக்கும் கவர்னர் பதவி கிடைக்கும் என்றும், அதை பெறுவதற்காக அண்ணாமலை துடிக்கிறார். அதனால் தான் அவர், திமுக மீது தினமும் குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை தான். அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள். இவரும் ஒரு சித்தராக இருக்கலாம்.

தமிழக அரசியலை புரட்டி விடலாம் என்று அண்ணாமலை பேசி வருவது இங்கே நடக்காது. குஜராத் மற்றும் உத்தர பிரதேச மக்களை போல் மடத்தனமான மக்கள் தமிழ்நாட்டில் இல்லை. 150 ஆண்டு கால அரசியலை பின்பற்றும் மாநிலம் தமிழ்நாடு. இங்குள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பவர்கள். அண்ணாமலையின் சத்தங்களுக்கு செவி சாய்த்து விரைவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் கவர்னர் பதவியை அவருக்கு கொடுப்பார். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் பாஜக அகில இந்திய கட்சி அல்ல மாவட்ட கட்சி தான். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
Recent Comments