அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் கமர்சியல் மாஸ் படமாக ‘தி லெஜண்ட்’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்
தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் சரவணன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா தமிழில் அறிமுகமாகிறார். இயக்குநர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கியுள்ள தி லெஜெண்ட் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
எமோஷன், ஆக்ஷன், காதல் மற்றும் காமெடி என அனைத்தும் கலந்து சிறு வயதினரில் இருந்து முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் கமர்சியல் மாஸ் திரைப்படமாக ‘தி லெஜண்ட்’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இதில் பதிவிடுகிறோம்.



மொத்தத்தில் படத்தில் சிரிப்பிற்கு பஞ்சம் இல்லை….
Recent Comments